பக்கம்:பாற்கடல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

85


ஆனால் இதுவே தன்னைத் தேடலின் மிகமிக அரிச்சுவடி நிலை. ஸத்தியத்தின் சொர்க்க வாசற்கதவு மணிகளின் கிண்கிணி. கதவுகள் இன்னும் திறக்கக்கூட இல்லை. கடக்க வேண்டிய பிராகாரங்கள் உள்ளே எத்தனையோ இருக்கின்றன. அவைகளுக்கு அப்பால் ஸன்னதி, அந்த ஒளிதான் சொர்க்கவாசல் வரை எட்டியிருக்கிறது. அதற்கு இங்கேயே தங்கப் படிக்கட்டில் நெற்றி பொருத்தி இந்தப் பிறவியின் முதல் அஞ்சலி.

ஜீவனின் முத்துக் குளிப்புக்கு உறுதென்பாக, அருளப்பட்ட வரப்பிரசாதமாக, அடைந்திருக்கும் ஆற்றலே எடை காண்பவனின் விழுக்காடு. பாலைவனத்து மணலில் உச்சி வெயிலில் விழுந்துவிட்ட வைரக்கல்லைத் தேடுவது போல்தான். நடப்பது யாதெனில், லோகாயதமான வசதிகளைப் பெறுவதற் காக விழிப்பு தந்த வித்தையைக் களங்கம் பண்ணிக் கொண்டு பயன்படுத்துகையில் அல்லது விழிப்பு வந்தும் கவனம் வேறு மாறாட்டங்களில் வழி தப்பிவிடுகையில், ஸர்ப்பம் தடாலென்று விழுந்து பழைய மயக்க நிலையில் ஆழ்ந்துவிடுகிறோம். அப்புறம் என்ன? அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு, அகப்பட்டதைச் சுருட்டுடா ஆண்டியப்பாவென்று - பின்னரும் அதே மாவை அரைத்துக்கொண்டு, நாளடைவில் அடைந்த வரமும் (gift) தேய்ந்து கட்டில் காலைப் போலப் பஞ்சபாண்டவர் என்று எழுதிக் காண்பித்த கதைதான். அநேகமாய் எல்லாரும் பின் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

மனச்சாட்சி பணயமானதற்குச் சந்தர்ப்ப சூழ்ச்சி மேல் பழி சுமத்தியாகிறது. அல்லது ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி, பிழைக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/91&oldid=1533364" இலிருந்து மீள்விக்கப்பட்டது