பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 75 — ஒச்சுதல்-உயர அலைத்தல் - உயிருணர்வு ஊரப் பொழிந்து-மாந்தரின் உள்ளுணர்வு மிகும்படி மழைபோற் பொழிந்து: உயர்வாழ்க்கை....பாடினே - உயர்வு சான்ற மாந்த வாழ்க்கை என்னும் பயிர் செழிப்புற்று நிரம்பும்படி பாடினய் கொல். கொல் - அசை, ஒ! இரக்கவுணர்வு தோற்ற வந்தது. இனியே நின் மறைவுக்குப் பின்னதாக இனி. துவர் இதழ்-சிவந்த இதழ். தாமரை-தாமரை மலர், தாமம்-கதிரவன். அரை-தண்டு; மலர்-பூ, கதிரவன் கண்டு மலரும் தண்டுப்பூ என்னுப் பொருளுடைய தூய தமிழ்ச்சொல் தாமரைப்பூ வென்ற முழுச்சொல் பின் தாமரை என்ற அளவிலேயே பூவைக் குறித்தது. முரலுதல்-வண்டின் இமிழும் ஒசை. . இயற்கை துங்கும் புலவர்-இயற்கையோடு பொருந்தி நிற்கும் புலவர். புலவர்-அறிவுடைவர். புலம்-அறிவு. பாவலர்-பா எழுத வல்லவர். பாவலரினும் புலவர் சிறப்புடையர். பா எழுதல் ஒரு கலைப்பயிற்சி. ஒவியம், கற்றளி (சிற்பம்) போலும் பா எழுது தலும் ஒரு கலேயே. புலமை அப்படிப்பட்டதன்று. இயற்கை அறிவு மிகுந்தது; பொறிகளாலும், புலன்களாலும் உணரப் பெற்ற உணர்வும், அவை வழி மெய்யுணர்வும் மிகப்பெறுதல் புலமை. இனி, பா எழுதுவோனுக்குப் புலமை நிரம்பியிருத் தல் வேண்டும் என்பதும், அஞ்ஞான்றே அவன் எழுதும் பா செப்பமும், நுட்பமும், திட்பமும் பொருந்தி விளங்கும் என்ப தும் பண்டைத் தமிழ் மரபு. இனி, புலமை பெற்றவர் எல்லாரும் பா வழியினனே தங்கள் அறிவுக் கருத்தினைப் புலப்படுத்தினர் ஆகலின் புலவர் பாவலரும் ஆனர் என்க. மயற்கை- அறிவுமயக்கம், அறியர்மை . மறவர்- துணிவு, ஆண்மை மிக்கவர்.