பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 74 — இனி நடைக்கடுத்து, ஒருவரின் பெருமிதம் அவர் குரலான் வெளிப்படலால் அவர் குரலின் செம்மாப்புக்கூற வேண்டுவதாயிற்று. - வான்பட்டு அதிருங்குரல்-வானின்கண் பட்டுத் தெறிக் கும் குரல். அதிர்தல்-ஒலிதெறிக்குதல். ஒருபுடை நின்று எழுப்பிய அவர்குரல் எண்டிசையும் பரந்துபட்டுச் சென்றது: கூறப்பட்டது. - மெல்லுயிரைச் சிதைத்தல் எளிதாகலின் வல்லுயிரைச் செகுத்த விழி எனப் பெருமிதந்தோன்றக் கூறப்பெற்றது. உயிரைச் செகுத்தலும், மனத்தை வெருவித்தலும், உடலக் கொல்லுதலும் செய்யும் அயில்விழி என்று கூறப்பெற்றது. அயில்-வேல், உயிரை அயிலுதலால் வேல் அயில் எனப் பட்டது, அயிலுதல்-உண்ணுதல். அவர் நடந்த மிடுக்கான நடையின் சுவடு தோயாமை, யும், அதிர்ந்த குரலின் செம்மாப்பு இன்னும் அடங்காமை யும், பகைவர் அஞ்சும்படி செய்து அவர் உயிர் செகுக்கும்படி நோக்கிய பெருமிதம் சான்ற விழி இன்னும் மூடாமையும், அவர் ஒச்சிய தடக்கைகளின் வீச்சு இன்னும் ஓயாமையும் இன்றும் நம்மிடையே இருப்பார் போன்றதோர் உணர்வை எழுப்புகின்றன என்க. - 桑 .... இமை குவிதல்-விழி மூடுதல் அவரின் திறந்த விழிகளையே கண் டு அவரின் மூடிய விழிகளைக் கண்டிலோம் ஆகையால் அவர் பார்வையே இன் னும் நெஞ்சில் உளதாகின்றது. . . . முங்குதல்-முழுகுதல் அன்னைத்தமிழ்-பிறமொழிகளுக்கு அன்னையாகி நின்ற தமிழ். - - தீச்சுடர் எழுத்து-தீயின்ஒளி நாக்குகள் போன்று குடு கொளுத்தும் எழுத்து. . : *– கொளுத்தி-பாவின் சுடரை மக்கள் நெஞ்சில் ஏறற. - - .- -