பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 73 — எவர் இனித் துணையாவரோ? இறப்பெனும் கள்வல்ை கவர்ந்து கொள்ளப் பெற்றனையே! விரிப்பு * இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும். பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம் மறைந்த ஞான்றை உள்ளக் கவற்சி மீதுTரப்பாடிய கையறு நிலைப் பாடல் இது. பாவேந்தரின் பெருமிதமான போக்கும், தமிழுக்கென ஒங்கி நின்ற குரலும் தமிழ்ப் பகைவர் அஞ்சிப் புறம் நடுங்கும் நோக்கும், பேரரசன் எனப் பெருமிதம் கொண்டு ஒச்சிய கைவீச்சும் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும் பயனும் இன்னும் தமிழர்களின் நெஞ்சங்களில் காட்சியாகி நிற்கும் நிலையினைக் காட்டி, அவர் பெரும் பிரிவால் தமிழர் இழந்த, இழப்பையும், அவலத்தையும் தொகுத்துக் கூறியதாகும் இப் பாடல். எவ்ர்கொல் துணையே......என்னும் முதலடியினை இறுதி அடிக்கு முடிவாகக் கொள்க. எவர் துணை: என்றமையால் இனித்துணை எவருமிலர் என்றபடி, # - . கவர்பு உற்றன-கவர்ந்து கொள்ளப்பெற்றன. பிறர் விரும்பும் ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாருகப் பிரித் ததால் கவர்தல் எனக் கூறவேண்டுவதாயிற்று. குவடுபட நடந்த சுவடு - குன்றம் பொடிந்து போமாறு நடந்த நடையான் அமைந்த சுவடு. நடைக்கும் பெருமிதங் காட்ட வேண்டிக் குன்றம் பொடியும் நடை எனலா யிற்று. ஒருவரின் வாழ்க்கைப் போக்கின் பெருமிதப் போக்கினை உணர்த்துவது ஒருவரின் நடையே ஆகலின் ந ைட முதற்கண் கூறப்பெற்றது. நடையெனினும் போக்கு எனினும் ஒன்றேயாகி, அவ்ர் வாழ்ந்த பெருமித மான வாழ்க்கைப் போக்கினைக் கூறிற்று இவ்வடி