பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 72 — தயிர்கடை மத்தம் ஆகித் தமிழர் உயிர் கடைந் தெடுக்கும் நின்பெரும் பிரிவால் உள்ளமும் அறிவும் ஒய்ந்த கள்ளமில் உணர்வின் கனியுநர் தமக்கே! பொழிப்பு : குன்றம் பொடிந்து படும்படி பெருமிதத்தோடு நீ நடந்து சென்ற காலடிகளும் இன்னும் மறையவில்லை; வானி ல் தெறித்து அதிரும்படி முழங்கிய நின் குரலொலியும் இன்னும் தேய்ந்து போகவில்லை; வலிந்த உயிர் அழிந்து போகும்படி பகைவர் அஞ்சுகின்றதும் உடலைக் கொல்லுகின்றதும் வேல் போல் கூரியதுமான நின் விழியின் இமைகள் இ ன் னு ம் குவிந்து போகவில்லை; முன் நாளைய பெருமையுள் முழுகி எழுந்த பேருணர்வினல் தமிழன்னைக்குப் புகழ்மாலை சூட்டி யும், தீயின் ஒளி நாக்குகள் போலும் எழுத்துகளினல் பாட்டில் சுடர் கொளுத்தியும், அரசோச்சி நின்ற நின் பெரிய கை களின் வீச்சும் இன்னும் ஒய்ந்தபாடில்லை. உயிர்களின் உணர்வு மிகும்படி பாடல்களே மழையெனப் பொழிந்து உயரிய வாழ்க்கை என்னும் பயிர் செழித்துப் புடைநிரம்பும்படி நீ பாடியிருந்தனையே! - . - இனியே, சிவந்த இதழ்கள் நிறைந்த தாமரையின் தேன்துளிகளைக் கவர்ந்து அருந்திய உவப்பின் மேவீட்டால் முரலுதல் செய்யும் கரிய வண்டைப்போல், இயற்கையூடு ஒன்றிப்படியும் புலவர் எனப்படுவோரும் இனி இலராக; இருள்மண்டி உறக்கம் கொண்டிருந்த தமிழ்நிலம் விழித்து எழும்படி, அருள்மழை பொழியும் அறம் பூண்ட நெஞ்சும் மடிந்துற்றதாக. த யி ைர அலம்பிக் கடைகின்ற மத்துப் போலும், தமிழரின் உயிரைக் கடைந்தெடுக்கின்ற நின்னு டைய. பெரும் பிரிவில்ை உள்ளமும் அறிவும் ஒய்தல் நின்ற கள்ளமற்ற உணர்வினர் கனிந்து நிற்போர் தமக்கு.