உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. எவர்கொல் துணையே! (தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்திய பாட்டின் வேந்தனே! உன்னின் பெரும்பிரிவு தமிழ ரின் உயிரைக் கடைந்தெடுக்கிறது என்று ஆற்ருமை யால் உளம் விதிர்வுறப் பாடிய கையறுநிலைப் பாட லிது! உரை விளக்கமும் உடனுள்ளது! பாவேந்தர் பிரிவின் போது, புதுவை திரு. முதுகண்ணன் என் பார் தொகுத்து வெளியிட்ட பாவேந்தர் நினைவு மாலையில் இதுவும் ஒரு மலராகக் கட்டப் பெற்று நூலில் அணிபெற்றது! ஆசிரியரின் பேரிலக்கியப் படைப்புகளில் ஒன்ருன நூருசிரியத்தின் 12-ஆம் பாடலாகவும் இஃது இடம் பெற்றுள்ளது!) எவர்கொல் துணையே! கவர்புற் றனையே! குவடுபட நடந்த சுவடும் மாருது: வான்பட் டதிருங் குரலுந் தேயாது; வல்லுயிர் செகுக்க மாற்றலர் வெரூஉம் கொல்லயில் விழியின் இமையுங் குவியாது; முன்னைப் பெருமையின் முங்குபே ருணர்வால் அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித் தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி, ஒச்சிய தடங்கை வீச்சும் ஓயாது; உயிருணர் ஆரப் பொழிந்துயர் வாழ்க்கைப் பயிர்செழிப் பூரப் பாடினை கொல்லோ! இனியே துவரிதழ்த் தாமரை கவர்துளி மாந்தி உவப்புற முரலும் கருவண் டொப்ப இயற்கை தூங்கும் புலவரும் இல்லர்! மயற்கை அகற்றும் மறவரும் இல்லர்! மருட்சி அகற்றிடு புரட்சியும் இல்லை! இருள்துயில் கொண்ட தமிழகம் எழவே அருள்மொழி நெஞ்சத் தறமும் மடிந்தது