பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பெய்யிலாப் புலவன் புகழ் வாழியவே! (மும்மைப் பொழுதும் முத் த மிழ் மொழிக் கெனத் தம்மைத் தந்த தகுபெரும் புலவகிைய பாவேந்தனின், உ ட ல் அழிந்ததாயினும் என்றும் உயிர் வாழ்கின்றது! வையப் பெரும் புகழை வழி வழிக் கொண்டவனகி மிளிர்கின்ருன் என்றவாறு அவரின் பிரிவுக்காற்ருமையார்ந்தவராய்க் கண்ணிர் வரிகளில், ஆசிரியர் இப்பாவை யாத்துள்ளார்!) தம்மனை நினையான்; தமிழ்நினைத் திருந்தான்; தம்மக்கள் பேணுன்: தமிழைப் பேணினான்! தம்பொருள் காவான்; தமிழ்காத் திருந்தான்! தம்நலம் விழையான்; தமிழ்நலம் விழைந்தான்! தம்துயர் போக்கான்: தமிழ்த்துயர்க் கெழுந்தான்! மும்மைப் பொழுதும் முத்தமிழ் மொழிக்கெனத் தம்மைத் தந்தான்; தம்வாழ் விழந்தான்! தன்னேர் ஆவி தமிழுக் களித்த மன்னன் பாவலன் மாத்தமிழ் மறவன்! பாடலுக் கொருவன்! பைந்தமிழ் வென்றி! கேடுறுந் தமிழ்க்குக் கேடயம்! நெடுவாள்! கூனற் பகைமுன் குமுறும் எரிமலை! வேனில் வெங்கதிர்! வீசும் கொடும் புயல்! புதுவையி னின்று பாடிய பூங்குயில்! எதுபைந் தமிழுக் கேற்றம் விளக்கும் என்றே கருதி இசைத்த பேரியாழ்! குன்ரு நாவும் கொதித்த நெஞ்சுமா வானமும் அதிர முழங்கிய வல்லிடி! கான வேங்கை கணல்தெறி களிறு! இமைநடுங் காமல் இரவும் பகலும் தமையும் நாட்டையும் காத்த காவலன்! அன்னேன் நல்லுடல் அழிந்த தாயினும் என்றும் வாழ்ந்தது வாழ்ந்தது இவன் உயிர்! வையப் பெரும்பெயர் வழிவழிக் கொண்ட பொய்யிலாப் புலவன் புகழ்வா ழியவே! . (சுவடி 5. ஒலை 4.)