உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 79 — தழைத்த பெரும்புகழ்ப் பாரதி தாசன் தனிப்புலமை குழைத்த தமிழ்போல் குளிர்பொழி வாயோ குலமகட்கே? 7 ஆர்த்த கழகத் தருந்தமிழ் மீதே அழிபகைவர் போர்த்த பழியிருள் நீக்க வெழுந்த பரிதியெனும் கூர்த்த மதிதிகழ் பாரதிதாசன் கொழுந்தமிழ் போல் சீர்த்தி நினைக்கிலை யே,கடல் சீர்த்தெழு செங்கதிரே! 8 கதிர்முன் பணியாய்க் கனல்முன் பொறியாய்க் கணித்தமிழின் முதிர்தீஞ் சுவைதரு பாரதி தாசன் முழுப்புலமை எதிர்முன் னிழிபடப் - பாடல் எழுதி இடர்ப்பட்டோர் அதிர்வுற லுண்டுளம் - அஞ்சலு முண்டே அலமரவே! 9. அலங்கலே ஆழ்கடல் - சூழ்ந்த வியன்பொழில் ஆர்.புதுவை இலங்குயர் சீர்மிகு - - பாரதி தாசன் எழில் மனத்தே குலுங்கினள் செந்தமிழ்க் , - கன்னி; குயிலெனக் கூவியுயிர் துலங்கினள்; எந்தமிழ் - - எங்கணும் பூக்கத் துணைசெயவே! ᎥᏄ. (சுவடி 4. ஒலை 4,