பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 82 – சோற்றுக்கு மடிவிரிக்கும் புலவர் கூட்டம் ! சுரண்டுகின்ற வாணிகர்கள்! அடிக்கும் மென்மைக் காற்றுக்கும் தாங்காத குடில்வாழ் மக்கள்! கண்ணிர்க்குப் பஞ்சமில்லை; பழம் விளக்கு மாற்றுக்குக் குஞ்சமெனப் பதவி, பட்டம் ! பகற்கொள்ளை 1 கலைக்கொலைகள் !! பெருகும் (மக்கட் பேற்றுக்குக் குறைவில்லை; சவலை நோஞ்சற் பிள்ளைகளோ கணக்கில்லை ! உணவுப் பஞ்சம்! உண்மைக்கு மதிப்பில்லை; பொய்யு ரைக்கும் உலுத்தஅர சியல்வாழ்க்கை, நீங்கள் மெச்சும் பெண்மைக்குச் சிறப்பில்லை; பிறழ்ந்த தாண்மை! பேயாக அலைந்துபணந் திரட்டும் கீழ்மை! திண்மையில்லை உள்ளத்தில்! தொண்டிங் கில்லை; திறமுமில்லை; கல்வியிலும் ஆழ மில்லை. அண்மையிலே அமைச்சரவை மாறிற் றிங்கே! அதன் விளைவை அடிக்கடி நான் அறிவிக்கின்றேன். வரிமேன்மேல் பெருகிற்று. நலத்தைக் கர்ணுேம். - வாய்நிறையப் பேசுகின்ருர்; செயலைக் காளுேம். செரிமானக் குறைவுமுண்டு செல்வர் பாங்கில் ! - சிக்கனஞ்செய் வார்பெண்கள் ஆடை தன்னில்! அரிமாப்போல் முழங்கினிரே இந்திக் காக! அந்நிலைதான் இன்றுவரை. ஆனல் ஐயா, வரிமாப்போர்: களிற்றுப்போர்! இரண்டாண் - . . . . (டின்முன் வாய்த்ததொரு மாணவப்போர்! தமிழ்மொ

(ழிப்போர் !

தமிழியக்கம் தந்தவரே! தமிழைக் காக்கத் தமிழகத்து மாணவர்கள் எழுந்த காட்சி சிமிழ்க்காத பெருமுனைப்பு அடடா அற்றைச் சேரர்சோ ழப்படையோ பாண்டி நாட்டின்