பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 83 — குமிழ்த்தெழுந்த போர்முழக்கோ என்னு மாறு கூடியதும் அலைத்ததுவும் தமிழைக் காக்க அமிழ்தான உயிரிழந்த மாட்சி தானும் அழியாத வரலாறு ! சலியாக் காதை ! வெடிக்கின்ற துயராகத் தமிழ கத்தின் வீழ்ச்சி பல இருந்தாலும், இக்கா லத்துப் படிக்கின்ற மாணவர்க்குத் தமிழ்மேல் நாட்டம் படிப்படியாய் மிகுந்துவரக் காண்கின் றேன்,நான் ! துடிக்கின்ற இளமையிலே அறிவு மேய்ச்சல் தொடங்கிவிட்டால், செந்தமிழ்ப்பால் அருந்தி (விட்டால் அடிக்கின்ற புயல்காற்றும் ஒடுங்கிப் போகும்! அடுத்துவரும் தலைமுறையும் நிமிர்ந்து நிற்கும்! மெய்யாக உரைக்கின்றேன்: ஐயா, உங்கள் மேஞளின் பேருழைப்பு-தமிழ்வே ளாண்மை பொய்யாகப் போகாது; முளைத்துக் காய்த்துப் புடைதிரண்டு கனிந்துபயன் தருதல் உண்மை! உய்யாமல் நின்றிருந்த தமிழர் கூட்டம் உணர்ந்தெழுந்து சிறப்பதுவும், இதுநாள் மட்டும் எய்யாமல் இருந்தபெரும் புகழ் அனைத்தும் எய்திடவாழ்ந் திருப்பதுவும் பெருத்த உண்மை/ இக்காலத் தமிழகத்தில் இருக்கும் தீமை எதிர்காலத் தமிழகத்தில் இருக்கா தென்பேன்! திக்காலுக் கோரிருவர் என்றில் லாமல் திரண்டிருப்பார் தமிழ்த்தலைவர் தமிழர் கூட்டம் தக்காரின் மொழி கேட்கும்; தகவே செய்யும்! தம்கடமை அறமுடிக்கும்; தமிழைக் காக்கும்! அக்காலிற் குலப்பிரிவு, சமயக் கூச்சல், அடிதடிகள், அருவருப்பு அறவே நீங்கும் !