பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 89 — பொய்யும் புரட்டும் போட்டுக் கலந்து செய்வதை எல்லாம் செய்துவிட் டிதுதான் தெய்வத் திருவுளம் எனச்சொல்லி நம்மை நம்பவும் செய்வான்; தான்நம்ப மாட்டான்; வெம்பச் செய்வான் இனத்தையும் மொழியையும்:

  • ്.

இப்படிச் செய்திட எவையவன் கருவிகள் தெரியுமா? உங்கட்குத் தெரியினும் சொல்லுவேன்! புராண வேதங்கள் புகன்ற பொய்க் கதைகள்! சடங்குகள் சாதிச் சழக்குகள்: மதங்கள்! செய்தித் தாள்கள்! வானுெலி நிலையம்! பொய்த்துத் தள்ளப் போதா வா, இவை: இத்தனைக் கருவியும் அவனுக்குச் சொந்தம்! செத்த தமிழன் பிழைப்ப தெப்படி? அத்தனைத் தமிழனும் அவன் சொல்லும் பொய்களை ஒத்துக் கொண்டு தான்-ஒன்றிரண் டன்றுமூவாயிரம் ஆண்டுகள் முடங்கிக் கிடந்தான்! நாவால் உரைக்கவும் உளமுயிர் நடுங்கும்! பாரதி தாசனர் பாட்டுகள் ஆரியர் வேரை அறுப்பன! விளைவைத் தடுப்பன! வேதப் புரட்டுகள் தமைவெருட் டுவன: , புராணப் புளுகினைப் புதைத்து மூடுவன: சாதிக் கொள்கையைச் சாகடித் திடுவன: மதப்புரட் டுகளை மாய்த்துத் தொலைப்பன! மூடக் கொள்கைக்குத் தீமூட் டுவன: தமிழனுக் குணர்வைத் தந்திடும் தணல் அவை: அமிழாக் கொள்கையை ஆர்க்கும் முரசவை! வளைந்த கூனை நிமிர்த்தும் வகையின! குலைந்த அவன்றன் குலத்தை இணைப்பன: தமிழ்மொழிக் கவை எரு தாழ்ச்சிக்கு நெருப்பு: அமிழ்ந்த புகழ்ச்சியை அகழ்ந்த, மண் வெட்டிகள்: