உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 90 — பாரதி தாசன் பகர்ந்த மொழியிது - 'நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான் பாரதி தாசனர் உரைத்த சூள் இது : "எனயீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் தனையின்ற தமிழ்நாடு தனக்கும் என்னல் தினையளவு நலமேனும் கிடைக்கும் என்ருல் செத்தொழியும் நாளெனக்குத் திருநாள் ஆகும்’ பாரதி தாசனர் நெகிழ்ந்துரைத் தது.இது - செந்தமிழே! உயிரே நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித் தேனே! நைந்தா யெனில் நைந்து போகுமென் வாழ்வு' தமிழனைப் பார்த்துச் சாற்றிய மொழியிது. "தமிழனே! இதுகேளாய்-உன்பால் சாற்ற நினைத்தேன் பலநாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஒம்பு! காணும் பிறமொழிகளோ வெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு! - நம்முரி மைதனைக் கடித்ததப் பாம்பு (தமிழனே) வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்: வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்; தம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்; நாமுயர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழிந்தார்! - - . . . . . . . - - (தமிழனே) தனித்தியங் கும்தன்மை தமிழனுக் குண்டு! தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு; கணிச்சாறு போற்பல நூலெல்லாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு - ... . . . .” (தமிழனே).