பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 91 – பாவேந்தர் சாற்றிய ஆணே மொழியிவை: தாயின்மேல் ஆணை தந்தைமேல் ஆனை தமிழகமேல் ஆணே! துயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன். நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும் ஒயுதல் இன்றி அவர்நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனே என் தாய்தடுத் தாலும் விடேன். எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன். ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக் குவப்புடன் நான் சேர்ப்பேன். பாவேந்தர் பாடிய பள்ளி எழுச்சி! ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம் கண்டறிவாய் எழுந்திருந்: இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த