பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 99 — அந்தநாள் நோக்கிய அரசியற் புரசிட்யைச் செந்தமிழ்ப் பாட்டால் பாவேந்தர் செய்தார். முன்அவர் செய்த செந்தமிழ்ப் புரட்சியும் பின்அவர் செய்த அரசியல் புரட்சியும் இடையிற் செய்த குமுகாயப் புரட்சியும் கடைசியிற் செய்த இலக்கியப் புரட்சியும் தமிழுள் ளளவும் தமிழர்க்குத் துணையாம். தொழிலா ளர்க்கெனப் பாடிய பாக்கள் எழில்கொழிப் போடே உளம்இயக் குவன: பாவேந்தர் கேட்பார்: “சிற்றுாரும் வரப்பெடுத்த வயலும்-ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி 3ளக்கும் நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் - . * . - தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை பொற்றுகளைக் சடல்முத்தை மணிக்கு லத்தைப் போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?" -எப்படிக் கேள்விகள்? செந்தமிழ்க் கணைகள்! எத்தனைப் பேர்களின் நெஞ்சைத் துளைத்தன? ஒவ்வொரு சொல்லுமோர் கோடரிப் பிளப்பு எத்தனைப் பேர்களின் கல்மனம் பிளந்தது? பாட்டின் வரிகளில் எத்துணை இரக்கம்: எத்துணை அக்கறை? எத்துணைத் துடிப்பு: மேலும் கேளுங்கள்: சித்திரச் சோகைளே!-உமைநன்கு திருத்தஇப் பாரினிலே-முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம்-சொரிந்தன. ரோ! உங்கள் வேரினிலே