உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 98 — "வீடெலாம் விடுதலை முழக்கம் மேவுக! ஊரெலாம் விடுதலை முழக்கம் உயர்க! காலையில் விடுதலே முழக்கம் காட்டுக! உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க! உறங்குமுன் விடுதலை முழக்கி உறங்குக! சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம் செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம் பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு’ - என்று பாவலர் முரசு கொட்டினர். முடியரசேற்றவர் கலங்க முழங்கினர். அடிமை விலங்குகள் தெறித்து விழுந்தன. விடுதலே உணர்வு எங்கணும் படர்ந்தது. ஆயினும் விடுதலை அரும்பிட வில்லை.

அடிமையைத் தமிழர் சாய்க்குநாள் எதுவோ, மிடிமையைத் தமிழர் போக்குநாள் எதுவோ, தமிழரைத் தமிழரே காட்டிக் கொடுக்கும் கயமைத் தனங்கள் மாபுநாள் எதுவோ, தமிழ்முன் னேற்றம் தனக்கெனத் தமிழன் இணைந்து நிற்கும் இன்பநாள் எதுவோ,

சாதிப் பேய்கள் தலைவிரித் தாடும் மடமைத் தமிழகம் தன்னிருள் நீக்கிப் பகுத்தறி வென்னும் பகலவன் நல்லொளி முகிழ்த்துப் படரும் மொய்ம்புநாள் எதுவோ., மாந்தர் மனத்தின் ஏற்றத் தாழ்வுகள் தீண்டத் தகாத குமுகாயக் கொடுமைகள் எத்துப் புரட்டுகள் எந்தமி ழகத்தை விட்டு விலகின என்னுநாள் எதுவோ அதுவே தமிழக விடுதலை நாளாம்! அதுவே ஆரியம் கெடுதலை நாளாம்!