பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ 97 — குமுகாய நிலையினில் தமிழர்கள் குமைந்த ஒரு புடைத் தீமை உண்ர்த்திய பின்னே அரசியல் வலிவால் வடவர்பால் அடிமை யுற்றுக் கிடந்த தமிழரை நோக்கினர். ஏற்றித் திரிந்திடும் வடவரைச் சாடினர். பாவேந்தர் உள்ளம் பாடுதல் கேண்மின்: "ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன் ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் நான் சேர்ப்பேன்." "செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே' எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆணே! இனியெங்கள் ஆட்சியிந் நாட்டிலே.” பாரதி தாசனர் கண்ட கனவிது: "என்தமிழ்அன்னை துன்பம் நீங்கித் தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன். என்தமிழ் நாடு தன்னட்சி பெற்றுத் துலங்குதல் காண்பேன்; தமிழர் நலங்காண் பேன்நான் நானில மீதிலே.” மொழிவிடு தலையும் இனவிடு தலையும் பழியிலாப் பாவலர் விரும்பிய கொள்கை! பாவேந்தர் முழக்கம் தில்லி ஆட்சியை நடுங்க வைத்தது; வடவரின் நரம்புகள் புடைத்துத் தெறித்தன.