பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 101 - தமிழ்க்குமு காயம் உலகினில் தழைக்கவும் தமிழர்க் குள்ளொளி ஏற்றவும் பாடிய புரட்சிக் கருத்துகள் புனைந்த பாக்கள்! மருட்சிக் கொண்டவர் மயக்கம் தெளியச் செந்தமிழ் தன்னைக் கருவியாய்க் கொண்டு எந்தமிழ் நாடு செழிக்கப் பாடினர். இத்தகு பாவலர் ஏற்றம் போற்றிட எத்தகு புலவரும் ஏற்றம் பெற்றிலர். புரட்சிப் பாவலர் நினைவு விழாவில் திரட்சி யான செந்தமிழ்ச் சொல்மழை பொழிவித் திடற்கே புலவர் இருவர் வந்திருக் கின்றனர்; அவரையும் வாழ்த் துவேன்! எந்தமிழ் மொழியின் ஏற்றம் விளக்கிட அன்னர் தம்மையும் யானழைக் கின்றேன். என்றன் முன்னுரை இதனெடு முடித்துப் பின்னுரை யாக இனும் சில பேசுவேன். பாட்டுரை செய்கெனக் கேட்டுக் கொண்டதால் பாட்டால் பாவேந்தர் திறத்தைப் பாடினேன் கேட்டுக் கொள்ள அணியமாய் இருந்தே இறுதி நொடிவரை இருப்பி ராயி : உரையால் பின்னுரை சொல்வேன்; யாவரும் இரையாதிருந்து விழாச்சிறப் புறும்படி - அமைந்து கேட்க அன்பினுல் வேண்டுவேன். (பின்னுரை உரையாக நிகழ்த்தியதால், இங்குக் தொகுப்பில் இடம்பெறவில்லை.) .