பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பச்சையப்பன் ஆடவர் கல்லூரி காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 9-2-73-இல் நடைபெற்ற முத்தமிழ் விழாப் பாட்டரங்கில் பாடியது.) பாப்புலவர் தந்திறமை பாடும் அரங்கிற்கு - மாப்புலவராய்த்தலைமை சான்ற மதிமிகுந்தீர்! பேரா சிரியப் பெருமாண்பீர்! கல்வியெனும் ஆரா வமிழ்துண்ணும் ஆண்மைமிகு மாணவரீர்! எல்லார்க்கும் என்றன் இனிய தமிழ்வணக்கம்! சொல்லார்க்கும் பாட்டில் சுவையார்க்கும் வண்ணம் இங்குத் தெய்வப் புலவர் திருவள் ளுவர்பற்றி, கைவருசெஞ் சொற்புலவர் கம்பர் திறம்பற்றி, ஈட்டுபுகழ் மாயா இளங்கோ எழில்பற்றி, • , , பாட்டுக் கொருபுலவன் பாரதி சீர்பற்றிப் பாப்பொழிந்து வைத்தார்கள்; பாராட்டிக் கேட்டீர்கள்! நாப்பொழிவால் உள்ளம் நனைந்து பதம்பட்டு வித்துதற்கு நல்ல விளைநிலமாய்த் தோன்றுகின்றீர்? சத்துதற்குத் தேவையில்லை; கன்னித் தமிழ்விதைகள்பாவேந்தன் பாவிதைகள் பன்னூறு வைத்துள்ளேன். சாவேந்தர் நல்விதைகள் சாவியாய்ப்போவதில்லை. அந்த விதையெல்லாம் அள்ளித் தெளிக்கின்றேன். எந்த வகையாய் விளையுமென எண்ணுகின்றீர்?" உள்ளத்தே ஊன்றி உயிரில் முளையெடுக்கும், வெளி ளத் துணர்வில் விளைந்து பயிராகும். காலத்தே முற்றிக் கருத்துக் கதிர்சாய்க்கும். ஞாலத்தே நமவளைவு நல்ல விலைபோகத் தக்கவொரு நேரமிது! நல்ல தமிழ்விளேச்சல் மிக்க பரவுமொரு மேலான காலமிதாம்! அக்காலந் தன்னில் அடியெடுத்து வைக்கின்ருேம் எக்காலும் ஞாலம் இருண்டிருக்கப் போவதில்லை.