பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 103 – போர்த்த இருளொருநாள் போகத்தான் போகும்;எழில் ஆர்த்த ஒளிவந்தே ஆளத்தான் ஆளும்;எமை மாய்த்த இழிநிலைகள் மாளத்தான் மாளும்.இதை வாய்த்த பெரும்புலவன் வான்முட்டச் சொல்லி - விட்டான், பாரதிதாசன்,அவன்பேர்; பாரதிக்கும் நல்லாசான்! ஈரமிகு நெஞ்சால் இவனவற்குத் தாசனென்ருன்! மற்றபடி தாசனென்ருல் மாண்புகுன்றப் போவதில்லை. கற்றபடி தானே கணக்குவரும்; பாட்டுவரும்! நல்லபடி பாவேந்தன் தன்னை அளப்பதற்கு வல்லபடி ஒன்றில்லை; வாய்த்தபடி தள்ளுபடி! அப்படியாய்ச் செய்தி அளந்தபடி யாயிருக்க எப்படி யாய்வீர் எழிற்பாவேந் தன்பாட்டை பாருங்கள், பாவேந்தன் பாரதிதா சன்திறத்தை! ஒருங்கள்! நான்சொன்ன துண்மையா பொய்யாவென் றப்போது சொல்லுங்கள்! ஆன்றமைவாய்க் கேளுங்கள், எப்போதும் காணிர் இடர். பாரதி தாசன் பகருவான் தன்னை: நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்'-என்றே! - . இதைவிடத் தன்னை எளிதாய் எவன்சொன்னன்? புதைவிடந் தோண்டி ஆராய்ச்சி. பண்ணி . இதோ, இவன் இப்படி அதோ அவன் அப்படி எனவோர் அறிஞன் இயம்பிட வேண்டும்! மனத்தைத் திறந்து மற்றும் உரைப்பான்: சிர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப் போர்த்திறத் தால்,இயற்கை புந்ைத ஓர் உயிர் நான் எப்படி அவன்திறம் அவனே உரைத்தது! அப்படிப் புனைந்த ஆருயிர் அவனுக்குக் கைவரும் பாட்டுத் திறத்தைக் கணிக்கிருன். பொய்வரா வாயால் புகல்வதைக் கேளுங்கள்: