பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سنہ 104 سسہ எப்படி அவன்றன் கொள்கை? எப்படி அவன்றன் வேகம்? தப்படி அடித்துத் தள்ளித் தலைகீழாய்ப் பொய்யைப் பேசிச் செப்படி வேலை செய்யும் சிறுமதிப் புலவன் அல்லன். இப்படி நான், காண்-என்பான். இதுவேயென் கொள்கை என்பான். 'இருளினே வறுமை நோயை இடறுவேன்" என்பான்; இன்னும் ஆனஎன் தமிழர் அ ட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன். ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் நான் சேர்ப்பேன. -என்பான் புலமை இறுமாப் போடு! தன்பாத் திறத்தைத் தனித்தனி யாகச் சொன்னல் அஃதொரு சுவைதரு விருந்தாம்! என்னல் முடியுமோ இல்லையோ! எதற்கும் இயன்ற வரைநான் எடுத்துக் கூறிட முயன்று பார்க்கின்றேன். முடிவது முடிக! பாவலர் ஒருவர்க்குப் பதின்திறம் வேண்டும். நுண்ணுேக்கு, கற்பனை, உவமை, பாத்திறன், 6.ண்ணும் இயற்கை ஈடுபாடு, உலகியல், மனவியல் அறிவு, மற்றுமொழி யறிவு, புரட்சி யுள்ளம், பொதுவுணர்வு-இவற்றில் வரட்சி யில்லா மனநிலை வேண்டும்! பார்க்கும் பொருளெலாம் பசையொடு நோக்கி ஆர்க்கும் அழகை அறியும் நற்றிறன் புலவோர்க் கல்லால் புறத்தார்க்கு வருவதில்! பலவோர் புலவராய்ப் பயின்று திரியலாம்!