உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 12! — இதைவிட மணக்கப் போகும் இருவரின் மனத்தும் உள்ளே புதைந்துள கருத்தை யார்தாம் புகன்றிட வல்லார்? மற்ருர் கதைவிடு வார்கள்; நெஞ்சக் கருத்தினை உணர மாட்டார்! எதைவிட? எதைநான் சொல்ல? இன்னென்று, மணந்தோர் காதல்! 'தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை! துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்ருன்.” எத்துணை நயமாய் எடுத்துச் சொல்கிருர்! பித்தனைப் போலப் பிதற்றவா வேண்டும்? சமையல் செய்யும் குடு. பப் பெண்ணின் அமைவான மனத்தை அளந்து தருகிருர், கொண்டவர்க் கெது.பி டிக்கும்? குழந்தைகள் எதைவி ரும்பும்? தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்க தென்ன? உண்பதில் எவரு டம்புக் கெதுவுத வாதென் தெல்லாம் கண்டனள்; கறிகள் தோறும் உண்பவர் தம்மைக் கண்டாள்!" கன்னித் துடிப்பையும். கணவ்னை மணந்த பெண்ணின் துடிப்பையும் பிரித்துப் பேசியோர், ஊருக்குச் சென்ருன் ஊர்வரக் கண்டதும், மோருக்குள் சிலிர்க்கும் மத்தென உணர்ச்சிகள் கொப்ப வரித்தன! ஆயினும் மாமியார் செப்பும் பகடிக்கு உள்ளம் நாணி ஒப்பனை செய்வதும் உலாவரத் திரிவதும் செப்பமாய்ச் செய்யும் மருமகள் செயல்களை ஊன்றி நோக்கி உரைப்பதைக் கேளுங்கள் :