பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 120 — கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு.பெண் கல்வி,பெண் கல்வி என்கின்ற தன்போடு!” பள்ளிப் பிள்ளையின் பச்சை மனத்தைத் தெள்ளத் தெளிவாய்த் தெரிந்திருந் தாலன்றி இப்படி எழுதிட இயலுமோ புலவர்க்கே! அப்படியே கன்னியின் மனத்தை அறிந்தவர்! 'நான்குபக்கமும் வேடர் சுற்றிட நடுவில் சிக்கிய மான்போல்-இங் கேன் பிறந்தேன் இவர்கள் வீட்டில் கரையி விட்டதோர் மீன்போல்!” "நூறுமுறை அவள்பார்த்தாள், அவனே! ஆளன் நூறுமுறை நோக்கினுன். இனிது பெற்ற பேறுதனை இழப்பாள் போல் குறட்டினின்று பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்குமுன்னர் ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்! அவன்வண்டிப் படிமிதித்தான் திரும்பிப் பார்த்தான்! இளைஞனின் இளைஞையின் இனிய மனங்களைக் களைந்திடா வண்ணம் கையகப் படுத்திடும் பெருந்திறன் பாவேந்தர் பிறப்பிலே முகிழ்த்தது! அருந்திறன் பிறர்க்கே அடுத்தது பாருங்கள்! “நகைமுத்தை விரும்பு கின்றேன்; நாளைக்கே மணக்க வேண்டும்! வகைசெய்க அப்பா வென்று வாய்விட்டு நானு சொல்வேன்? நிகரற்ருய் உன்பெற் ருேர்பால் நீசொன்ன லென்ன வென்முன்.” மகளுக்கு நாண மில்லை என்பார்கள் மாட்டேன்’ என்ருள்.