பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 19 — வீழ விரித்துக் கறிவகைகள்-சூழவைத்துத் தண்ணிர்வெந் நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு வெண்சோ றிடுமுன் மிக இனிக்கும்-பண்ணியமும் முக்கனியும் தேனில் நறுநெய்யில் மூழ்குவித்தே ஒக்கநின்றே உண்டபின் சோறிட்டுத்-தக்கபடி கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால் ஊட்டுதல்வேண் டும்தாய்போல் ஒண்டொடியே கேட்டுப்போ எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே அக்கறியை மேன்மேலும் அள்ளிவை - விக்குவதை நீமுன் நினைந்து நினைப்பூட்டு நீர் அருந்த! ஈமுன்கால் சோற்றிலையில் இட்டாலும்-தீமையம்மா!' -என்றே குடும்ப விளக்கில் எழுதுகின்ற பொன்னேர் வரிகளாற் பாவேந்தர் பூண் விளங்கும்! அடுத்து, அவர் மனவியல் அறிவை உரைக்கிறேன். தந்தை குழந்தையைத் தாவி யணேத்துப் பள்ளிக் கனுப்பும் பாங்கை உரைக்கிருர்! 'தலைவ்ாரிப் பூச்சூடி உன்னை-பாட சாலைக்குப் போ என்று சொன்னுள் உன்அன்னே! சிலைபோல ஏனங்கு நின்ருய்-நீ சிந்தாத கண்ணிரை ஏன்சிந்து கின்ருய்? விலேபோட்டு வாங்கவா முடியும்-கல்வி வேளைதோறும் கற்று வருவதால் படியும்! மலைவாழை யல்லவோ கல்வி-நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணு யிருந்தால்-கேலி பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஒடுமுன் ஒடு!-என் கண்ணல்ல.? அண்டை வீட்டுப் பெண்களோடு!” கடிதாய் இருக்குமிப் போது!-கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது