பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 18 — பொதுக்கருத்து போகட்டும் புலவர் புகன்ற புதுக்கருத் தொன்றைப் புரட்டிப் பார்ப்போம்! மருமகட்கு மாமி விருந்தோம்பும் மாண்பை அருமைத் தமிழில் அறிய உரைக்கின்ருர்! முன்வைத்த முத்துத் தயிரிருக்கும்; பின்னறையில் வெண்ணெய் விளாங்காய் அளவிருக்கும்-கண்ணே மறக்கினும் அம்மாவென் றழைத்து மடிப்பால் கறக்கப் பசுக்காத் திருக்கும்-சிறக்கவே” "சேலத்து அங்காடிச் சேயிழையார் நாள்தோறும் வேலைக் கிடையில் மிகக்கருத்தாய்த்-தோலில் கலந்த சுளேபிசைந்து காயவைத்து விற்கும் இலந்தைவடை வீட்டில் இருக்கும்-மலிந்துநீர் பாய்நாகர் கோயில் பலாச்சுளையின் வற்றலினைப் போய்நீபார் பானையிலே பொன்போல-தேய்பிறைபோல் கொத்தவரை வற்றல் முதல் கொட்டிவைத்தேன், கிள்ளையே வைத்தவரை உண்டுபின் வையாமைக்-குத்துன்பம் உற்றிடச்செய் ஊறுகாய் ஒன்றல்ல கேட்பாய்நீ இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை-வற்றியவாய் பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை! மாரிபோல் நல்லெண்ணெய் பாருமல்-நேருறவே வெந்தயம் மண்க்க அதன் மேற்சாயம் போய்மணக்கும் உந்துசுவை மாங்காயின் ஊறுகாய்-நைந்திருக்கும் காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ளுடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன்-தேடிப்பார்! கீரை தயிர் இரண்டும் கேடு செயும் இரவில்! மோரைப் பெருக்கிவிடு முப்போதும்-நேரிழையே சோற்றை அள்ளுங்கால் துவள்வாழைத் தண்டில்உறும் சாற்றைப்போ லேவடியத் தக்கவண்ணம் - ஊற்றுநெய்யை! வாழை இலையின் அடி உண்டார் வலப்புறத்தில்