பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 123 — பச்சைப் பசுங்கிளி தானெனக் கொஞ்சலும் பார்த்தில னே இன்று பூரிப்பதேன்? அச்சீமை சென்றவன்-என்மகன்-வீட்டை அடைத்த மகிழ்ச்சித் திருக்கூத்தோ' மருமகள் பூரிப்பை மகிழ்வொடும் குறும்பொடும் அருமையாய் உரைக்கும் பாவேந்தர் அருதிறன் எத்துண்ைப் பெரியது! எத்துணைச் சிறந்தது! இத்துணைச் சிறப்பாய் எவரெடுத் துரைத்தார்? தற்கா லத்துத் திரைப்படப் பாடலை முக்கலும் முனகலும் முறுகலும் திருகலும் கெக்கவி இசையொடு கேட்டுமுகஞ் சுளிக்கும் அருவருப் புணர்ச்சியிப் பாடலில் உண்டா? பெருமகிழ் வன்ருே பின்னிப் பிணையும்: காசடிக் கின்ற கயவரின் கண்கள் மாசிலா இத்தகு மாண்புடைப் பாடல்கள் பக்கந் திரும்புமா? பயனும் விளையுமா? எக்காலத் தந்நிலை எய்துவ திங்கே? புதிய மனநிலை புகட்டும் பாவலர் முதியோர் காதலை முழக்குதல் கேளீர்! 'அறம்பெய்த கையும் ஒயும்; மக்களை அன்பால் துக்கிப் புறம்போன காலும் ஒயும்; செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறங்கேட்ட காதும் ஒயும்! செயல்கண்ட கண்ணும் ஒயும்! மறவனைச் சுமக்கும என்றன் மனம்மட்டும் ஓய்தல் இல்லை!" மறவனைச் சுமக்குமாம் மங்கையின் முதியவுள்ளம்! மனம்மட்டும். ஓயாதாம்: புலவரின் மனவியல் எத்தகு சிறப்பாய் இருந்தது பாருங்கள்! மெத்தவும் சிறப்பாய் மேலும் உரைக்கிருர்!