பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-131- தமிழ்உள்ளம் நாட்டுப்பற்று தகுவுயர் சீர்திருத்தம் இமியுமே குறையாவாறு இருந்தன அவர்பால்! தமிழ்உள்ளம் அவர்க்கே உள்ள தனியுள்ளம்! இதற்குமுன் யார்க்கும் இல்லா தது,அது! 'இன்பத் தமிழ்மொழி எமது!-எமக் கின்பம் தரும்படி வாய்ந்தநல் லமுது! -என்றதும், "கனியிடை ஏறிய சுளையும்-முற்றற் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப் பாலிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும்-தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும்-தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! -என்றதும், செந்தா மரைக்காடு பூத்தது போல செழித்த என்தமிழே ஒளியே வாழி' -என்றதும், செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித் தேனே! நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு! நன்மை உனக்கெனில் எனக்குந் தானே? -என்றதும், "எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால் செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்! - என்றதும் தமிழ்மேல் அவர்க்குள்ள காதல்க் காட்டும்! தமிழ்க்காக வாழ்ந்தார், தமிழைப் பாடினார்: தமிழைத் தொழுதார்; தமிழைப் புதுக்கினர்