பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 133 – "தமிழரின் மேன்மையை இகழ்ந்தவண்-என் தாய்தடுத் தாலும் விடேன்-என்று' தமிழ்க்காகப் போரிட்டார்: 'இன்பத் தமிழ் குன்றுமேல் தமிழ் நாடெங்கும் இருளாம்-என்று கவன்ருர்; அறிவுறுத்தினர்; கண்ணிமையாது காத்தார்: 'துரக்கத்தில் பிதற்ற நேர்ந்தால் துய்தமிழ் பிதற்றும் என்வாய்' என்று, தமிழும் தாமுமாய் ஒன்றிக் கிடந்தார்: உயிரொடு பொருத்தினர். அந்தத் தமிழே அவரையும் உயர்த்தி இந்த நாட்டையும் இனிதுயர்த் துவது! இவர்க்குத் தமிழ்மேல் எத்துணை ஆவலோ அத்துணை அக்கறை தொழிலா ளர்மேல்! 'குடிக்கவும் நீரற்றிருக்கும்-ஏழைக் கூட்டத்தை எண்ணுமல் கொடுந்தடியர்க்கு மடங்கட்டி வைத்ததிளுலே-தம்பி வசங்கெட்டுப் போன்து நமதுநன் டுை' என்றவர் கூறுதல் எவ்வகை யில்பிழை? சிற்றுாரும் வரப்பெடுத்த வயலும்-ஆறு தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி அளக்கும் . நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலேபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?