பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

دس، 34 1 سس என்றஅவர் கேள்வி ஏற்றதோர் கேள்வியே! தமிழ்க்கவர் தந்த தாழாத உழைப்பும் தொழிலா ளர்க்கவர் தோள்தந்த மாண்பும் பாரதி தாசனைப் பாவேந்தர் ஆக்கி பாரறி யும்படி பண்ணி வைத்தன! இத்தகு புலவர்போல் எந்தமிழ் மொழியிலோர் ஒத்த புலவரை உணர்ந்திட வில்லை! வீரமும் தமிழும் வியத்தகு புலமையும் ஈரமும் ஏழைமேல் இரக்கமும் சேர்ந்தால் பாரதி தாசனென் பாவலர் தெரிவார்! ஊரதி ர,அவர் ஒண்புகழ் வாழ்கவே!