பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 142 — அடுத்து, அவர் புரட்சிப் பாவலர் ஆகிக் கடுத்த நெஞ்சொடும் கனலொடும் பேசுவார்! 'வையம் ஆண்ட வண்டமிழ் மரபே.! கையி ருப்பைக்கோட்ட எழுந்திரு' குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணுக் கடல்போல் மாப்பகை மேல்விடு! நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு! பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை' 'இருக்கும் நிலைமாற் றஒரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடம்ை.” அடுத்துப், பெண்மை போற்றிய பெருமைப் பாவலர் ஒண்மை பாரதி தாசப் பாவலர்! பெண்களால் முன்னேறக் கூடும்-நம் வண்தமிழ் நாடும்எத் நாடும் -என்று -எடுத்த எடுப்பிலே முழக்கம் இடுவார்! அடுத்த குரலிலே ஆணையே பிறக்கும்! பெற்றதல் தந்தைதாய்'மாரே-நும் பெண்களைக் கற்கவைப் பீரே! அடுத்தொரு பாடல் அடியைக் கேட்பீர்! துடித்த அவர் உள்ளக்குேமுறலைத் தோய்ப்பார்! ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும் நீணிலத் தெங்கணும் இல்லை! - வாணிகம் செய்யலாம்ந்பெண்கள்-நல் வானூர்தி ஒட்டலாம் பெண்கள்: