பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 141 – பாட்டுப் புலவன் பாரதி தாசன் ஊட்டிய உணர்வால் ஊமையும் பாடினன்! காட்டிய கருத்தால் கண்ணிலான் கண்டான்! தென்றலாய்ப் பாடினன்! தீந்தமிழ் சொன்னன்! தென்றிலடிக்கும் திறத்தைப் பாருங்கள்! 'தென்றலடிக்கையில் பச்சிளங்கீற்று சிலிர்த்து நிலைகுலைந் தாடுதல் போல்...' அந்தியிலே இளமுல்லை சிவிர்க்கச் செந்நெல் அடிதொடங்கும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தை, உடல் அணுஒவ்வொன் றுஞ் சிலிர்க்கக் செல்வம் ஒன்று தவழ்ந்துவரும் அதன்பேர் தென்றல்' (வேறு) இனி, பாவேந்தர் உள்ளத்துள்ளே எரிமலை புகைந்ததென்ருல் ஈவாக என்ன நிற்கும்? என்பதை அறிய வேண்டும்! சாவேந்திச் சென்ற தந்த தனிமகன் தனையென்ருலும் துவுந்தீக் கனப்பால் இன்றும் துவைக்கின்ருர் பகைவர் (அன்ருே? (வேறு) . எரிமலைக் குமுறலை இதோ:இவண் கானுக : எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆண! இனியெங்கள் ஆட்சியிந் நாட்டிலே’ அடுத்தொரு குமுறலை அதோ கேளுங்கள்! ‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! தென்னுட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்! செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!”