பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سے 140 سس தாவேந்திச் சதிராடும்! இனப்பற்றுத் தழைத்துவரும்! தமிழ்நாட் டுக்குக் காவேந்தி வல்பகையை ஒட்டிவிடும் திறம்முகிழ்க்கும் காண்பாய் இன்றே! அத்தகைய புதுமைப்பா, புரட்சிப்பா ஆக்கிவைத்த அண்ணலுக்கே இத்தகைய விழாவெடுப்பார் எந்தமிழர் இழிவுக்கா ஏற்றஞ் செய்வார்! புத்தகத்தைப் புரட்டாமல் புழுத்திருக்கும் இந்துமதம் புரட்டு கின்ற எத்தகத்தைக் கண்டுகொள்வார் எந்தமிழர் இனிவருநாள்: ஏற்றங் காண்பார்! முடிவுரை! அன்புடைப் பெரியீர்! அருமைத் தமிழரீர்! இன்பம் தந்த இனியபா வரங்கம் ஒருவா முக உய்வைத் தந்தது! கருவாய் இருந்த தமிழ்தலம் கனிந்தது! எண்ணிப் பாருங்கள் எந்தமிழ் வாழும் மண்ணில் பாரதி தாசனர் வந்து பிறந்திரா திருந்தால்... உணர்வு பிறக்குமா? இறந்திரா திருந்தால்...! என்னென்ன விளையும்? எண்ணிப் பாருங்கள்! எண்ணிப் பாருங்கள்: கண்ணின லன்று கருத்தில் பாருங்கள்! பாவேந்தர் பிறந்தார்! பாட்டினி லேஓர் ஆவல் பிறந்தது! தமிழர் அனைவரும் பாட்டுத் திறத்தினில் பாரையே வெல்லுவார்! நாட்டுப் பற்றும், நன்மொழிப் பற்றும் பாட்டால் வளரும் பான்மையை அறிக !