உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 139 — ஆயிரம்பேர் நடுவினிலே பெண்விளக்கை நிறுத்தியங்கே அவிழ்த்துப் போட்டு வாயினிலே நீரூற்றல் போல்மதுவை வயிரரு மண்டி விட்டுக் காயாயும் பிஞ்சாயும் சொல்லுதிர்த்துக் காட்டியவை கணிகள் என்றே வாயுரமாய் பேசுகின்ற வகையல்லால் நல்லதமிழ் வழக்கங் குண்டா? பளபளக்கும் திரைப்படத்துக் கூத்தியர்தாம் பண்பிழக்கும் பான்மை யெல்லாம் வளவளக்கும் சொல்லாலே வழித்தெடுத்துப் பாட்டென்னும் வடிவங் காட்டித் தொளதொளக்கும் ஆடையினைச் சிறுகுழந்தை போட்டதுபோல் துவளக் காட்டும், சளசளக்கும் ஒசையெல்லாம் பாட்டென்ருல் செந்தமிழும் சாதல் நன்றே! ஆடையினை முற்ருக அவிழ்த்துப்போட் டாடுவதே ஆடல் என்ருல், ஒடையிலே நீர்போல ஒன்பதுகோ டிப்பாடல் உரைக்க வல்லோம்! கூடையிலே-வாருகின்ற சரளைகள்போல் கோடிப்பா குவித்தும் என்ன? பாடையிலே போகின்ற பிணம்போலுன் பாடலெல்லாம்! பயனென் காண்போம்! பாவேந்தன் மொழியுணர்வுப் பாடலொன்றைக் குழந்தைக்கும் படித்துக் காட்டில் நாவேந்தும் செந்தமிழை நல்லுணர்வை நெஞ்சேந்தும்! நடையில் வீரம்