பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 138 — செய்ம்புதுமை ஒன்றன்றே அவன்பாட்டில்! சீர்திருத்தம் முழங்கச் செய்தான்! பைம்புதரில் பூத்த தமிழ்ப் பூவான்ை! பைந்தமிழ்ப்பூந் தும்பி யான்ை! ஒட்டாரங் கட்டியொரு சொல்லுக்கே ஊர்முழுதும் அலைந்து தேடிக் கொட்டாவி விட்டுமுகம் மேல்பார்த்துக் கீழ்பார்த்துக் குனிந்தெ ழுந்து கட்டாத பாட்டெல்லாம் மொழிக்கயிற்றில் கட்டியொரு கவியென் று.ாரைத் தெட்டாமல் தெட்டிவரும் பொய்ப்புலவர் போல்அல்லன் புதுவை வேந்தன்! மாணிக்கச் செழும்பரிதி மேற்றிசையின் வானத்தில் மறையும் போதில் ஆணிப்பொன் முத்தெனவே கீழ்த்திசையில் நிலவொளிரும் அழகைப் போல ஏணிக்குப் படிபோல ஒருசொல்மேல் ஒன்றுவந்தே இறங்கு கின்ற பாணிக்கிங் கார்புலவன்; பாவேந்தப் புலவனல்லால்? பாவல் லோரே! கண்ணனுக்குத் தாசனென்பான் 'கவியெழுத - வல்லனென்பான்; கழுத்த றுப்பான்! புண்ணுக்குச் சீழ்போலப் புழுவுக்கு மலம்போலப் புதுமை யென்னும் மண்ணுக்குச் செந்தமிழால் மாரடிப்பான்! மாண்பிழப்பான்! மலத்தைத் தின்னும் பெண்ணுக்குப் பிறக்கின்ற குட்டிகள்போல் பாப்பலவாய்ப் பெற்ருன் அங்கே!