பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. -- 137 س. ஆரியத்துக் கோழைக் கடிமையுற்ற போதில் வீரியத்தை நாமும் . விட்டுவிட்ட போதில், கூரியசொல் வாளால் குத்திமறம் கீண்டி நேரியபு ரட்சி நிகழ்த்திவைத்த கோமான்' (வேறு) - பாவேந்தன் சொல்லெடுத்துத் தன்மானந் தனக்குழைத்துப் பாட்டென்று தாரா விட்டால், நாவேந்தும்மொழி யெல்லாம் சமற்கிருதம்! கதைகளெலாம் இராமன்கதை பார தந்தாம்! பூவேந்தும் கைகளிலே புழுக்கையினை அன்ருேநாம் ஏந்திநிலம் புதைந்தி ருப்போம்! ஈவேந்தும் கடமையினல் விழா வெடுப்போம்! எனினும்வினை இம்மி செய்யோம்! (வேறு) செந்தமிழர் தோள்களிலே மறமேற்றி - வைத்தசெம்மல் செழுந்தீம் பாவால் எந்தமிழர் நாவினிலே இனித்ததமிழ்க் கண்டெடுத்தே இழைத்த வேந்தன்! அந்தமிழப் பெண்டிரெலாம் அணியணியாய் ஆரியத்தால் அழிந்த போதில் - வந்துதமிழ் மானத்தைத் தூண்டுவித்து மங்கையரைக் காத்த வீரன்! கைம்பெண்கள் எழுகென்ருன் கடிமணங்கள் செய்கென்ருன் கன்னிப் பெண்கள் மொய்ம்புதரும் காதலினுல் தாம்விரும்பும் ஒருவனையே முடிக்க என்ருன்!