பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 136 — (வேறு) தக்கதமிழ்ச் செழுந்தீம்பா நற்றமிழ்ப்பா! தனிச்சுவைப்பா தண்டமிழ்ப்பா! தப்பாதப்பா! எக்காலுந் தமிழிரிடை இருந்தமிழ்ப்பா! இணையிற்பா எழில்சேர்பா! இலக்கணப்பா! முக்காமல் முண்காமல் முகிழ்த்ததப்பா! முறுவல்பா! புரட்சிப்பா முழுதுந்தேன்பா! செக்காடும் ஒசைவராச் செந்தமிழ்ப்பா! சிறப்புப்பா சுவையப்பா சொல்வா யப்பா! காராடும் குளிரிருக்கும்! கதிராடும் கனப்பிருக்கும் காற்றிருக்கும் ஊற்றிருக்கும்! சீராடும் குழந்தைக்குச் சிணுங்காத சிரிப்பிருக்கும்! செழிப்பிருக்கும்! - செழும்பூஞ்சோலை நீராடும் கன்னிக்கு நினைவிருக்கும் படிகாதல் நிகழ்விருக்கும்! அன்பிருக்கும்! போராடும் வீரர்க்குப் புரட்சியெனும் புத்துணர்வால் தோள்களெலாம் புடைக்கும் - அன்ருே' (வேறு) தமிழ்க் குடும்பத் திட்டம் தந்திருப்பார் அங்கே! குமிழ்த் தெழுந்த இன்பம் குவித்திருப்பார் பாட்டில்! சிமிழ்த் துவிழி யாத செந்தமிழ வீரர்! தமிழ்ப் புரட்சித் திட்டம் தந்திருப்பார் பாட்டில்!