உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 150 — கரும்புதந்த தீஞ்சாறே, கனிதருவின் சுளையே கவின்முல்லை வெண்ணகையே’ எனும்பாட்டில் தமிழை விரும்பியவன் அன்பே,அன் பே'யன்பே' என்று விளித்திடுங்கால், உயிருடலம் அனைத்துந்தமி ழாக அரும்பிமலர்ந் துலகமெலாம் அளாவியிருப் பதுபோல் அரியவுனர் வொன்றுநம்மின் உள்ளத்தில் தோன்றும்! பெரும்புதுமை இதுவன்ருே? எப்புலவன் தமிழை பேச்சுக்கும் மூச்சுக்கும் அன்பே'என் றழைத்தான்? 18 இவ்வாருய்ப் பாவேந்தன் கருத்துநலன் எல்லாம் எடுத்தெடுத்து நீங்களெலாம் சுவைக்கும்படி ஈவர், இவ்வாறு தமிழ்ப் புலவர்-இன்றமிழ்ப்பா வாணர்; இருந்துநலங் கேட்டிடவும் யான்வேண்டு கின்றேன்! ஒவ்வாத பாடல்பல கேட்டிருப்பீர்! உங்கள் உள்ளமெல்லாம் நாறடிக்கும் அப்புலவர் கூட்டம்! அவ்வாருய் இப்புலவோர் பாடஅறி யார்கள்! அருந்தமிழ்க்கே ஒளிசேர்க்கும் புலவரிவர் காண்பீர் 18 பின்னுரை பாவேந்தர் கருத்துநலன் பாப்புலவர் சொன்னர்! பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டிருந்தோம் நாமும்! பூவேந்தும் நறுந்தேனைச் சுவைத்திடுந்தே னிக்கள் போலன்ருே நாம்சுவைத்தோம்! புலவரெலாம் வாழ்க’ சாவேந்திச் சென்றதெனப் பாவேந்தைச் சொன்னர்! சரியில்லை என்போம்நாம்! செந்தமிழ்த்தீம் புலவர் நாவேந்தி வாழ்கின்ருர் பாவேந்தர்! உண்மை! நாடெல்லாம் வீடெல்லாம் அவர் வாழ்கின் ருரே! 16 செந்தமிழ்க்கே அவர்பிறந்தார்; செந்தமிழ்க்கே வாழ்ந்தார் : செந்தமிழ்க்கே மூச்சுயிர்த்தார், செந்தமிழ்க்கே பேசிச் செந்தமிழ்க்கே அவருழைத்தார்; செந்தமிழாய் நின்ருர்; செந்தமிழ்க்கே ஒளியேற்றிச் செந்தமிழ்க்கே மாய்ந்தார்!