உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1970-சனவரி-இரமணி மறைவு. 1971-ஏப்பிரல் 29-பாவேந்தரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப்பெற்றது; ஒவ் வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள்கோயில்,தெரு,95-ஆம் எண் இல்லம் அரசுடைமை பாயிற்று. அங்கே புரட்சிப்பாவலர் நினைவு நூலகம்-காட்சிக் கூடம் நடந்துவருகிறது. 1972-ஏப்பிரல் 29 பாவேந்தரின் முழு உருவச்சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது: 1979-கடல் மேற் குமிழிகள் பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப்பெறல். நன்றி: |புரட்சிப் பாவலரின் சிரிக்கும் சிந்தனைகள்’ தாலிலிருத்து)