பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 152 — தன்விளக்கம் பாடுகின்ருன் பாவேந்தன் இங்கேi தமிழ்ப்புலவன் செம்மாப்பைக் கேளுங்களிப் பாட்டில்! சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப் போர்த்திறத்தால் இயற்கை புனைந்தஓர் உயிர் நான்' இன்விளக்கம்! இதுவாகும் இயற்கைதந்த உயிர் நான்' என்றுரைக்க வில்லையவன்; புனைந்தஉயிர் என்ருன்! என்விளக்கம்! உணர்ந்தீரா? இருக்கும் உயிர் யாவும் இயற்கைத்தாய் செய்தெடுத்து வீசிவிட்ட உயிராம்! என்வியப்பு பாவேந்தன் உயிரைமட்டும் நன்ருய் எழில்சீர்த்தி அறம்செழுமை வீரத்தொடு புனைந்தாள்! பாவேந்தன் சொல்லுகின்ருன்; யாரிவன்போல் சொன்னர்! பாருங்கள் மேன்மேலும் அவன்கையின் வண்ணம்! நாவேந்திப் பிறர்சொன்னல் உணர்வேந்திச் சொல்வான்! நல்லதமிழ் பிறர்சொன்னல் உயிர்த்தமிழைச் சொல்வான்! காவேந்திக் கொண்டிருக்கும் பூவேந்தித் தேனைக் களிமதர்ப்பக் குடித் திசைக்கும் தேனிப்போல் தமிழின் ஈவேந்தித் தருகின்ருன் செந்தமிழாய்! பாவாய்! இயற்கையினை இவனைப்போல் படம்பிடித்த தெவரே! "கடல்நீரும் நீல்வானும் கைகோக்கும்’ என்றே கற்பனைக்கும் கற்பனையாய் யார்சொன்னுர் கேட்பீர்: கடல்நீரும் நீல வானும் கைகோக்கும்! அதற்கி தற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம்! எழில்வீணை! அவ்வீ ணைமேல் அடிக்கின்ற காற்ருே வீணை நரம்பினை அசைத்தின் பத்தை வடிக்கின்ற புலவன்! தம்பி வன்கடல் பண்பாடல் கேள்!