பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 166 — எரிகின்ற நெஞ்சின்மேல் ஆணையிட்டுச் சொன்னன்! இனியெங்கள் ஆட்சியிந்த நாட்டிலென்றே உரைத்தான் எரிசருகு தமிழர்களை எதிர்த்திடுவோர் என்ருன்! இன்னுமவன் நாடுபற்றிச் சொன்னமொழிகேட்பீர்! ‘தென்னுட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்! செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்! ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் நான் சேர்ப்பேன்’ செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க தந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்த தென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!’ புரிகின்ற தமிழ்ப்போர்க்குப் புதுப்புரட்டுக் காரர் புலேமனத்தால் தடையிடுவார் நாம்அஞ்சல் வேண்டாம். சரிகின்ற தமிழினத்தைக் காத்திடுதற் கென்றே சாகாத உணர்வுடைய இளைஞர்க்கிவை சொல்வான்! -4 ! "தமிழ்நிலத்தில் தமிழான பயிர்விளைச்சல் குறைவு! தமிழ்நிலத்தில் அயல்மொழியாம் களைவிளைச்ச மிகுதி! தமிழ்நிலத்தில் தமிழ்க்கொள்கை எனும்விளைச்சல் குறைவு தமிழ்நிலத்தில் அயற்கொள்கைக் களைவிளைச்சல் மிகுதி! தமிழ்நிலத்தில் தமிழ்ஒழுக்கப் பயிர்விளைச்சல் குறைவு! தமிழ்நிலத்தில் அயலொழுக்கக் களைவிளைச்சல் மிகுதி! தமிழர்களே களை நீக்க வேண்டாமா? உங்கள் சமையஉளத் தாலன்றித் தமிழ்உளத்தால் சொல்க!”