பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 171 — ஏற்றமொழி, இயற்கைமொழி, இனியமொழி, பண்டை இலக்கியமும் இலக்கணமும் செறிந்தமொழி, இன்னும் வேற்றுமொழி யாவையுமே கருவுயிர்க்காப் போதில் விளைந்துபெரு மரமாகி நிற்குமொழி தமிழாம்! 每蓬 செந்தமிழைத் தாய்மொழியென் ருெருமுறையால் மட்டும் சிறப்பதன்மேல் சாற்றவில்லை; தாய்ஊமை யாளுல் சொந்தமென ஒன்றிருக்கும்; உயர்வென்ருல் சரியோ? சொல்லுகின்ற சிறப்பெல்லாம் உலகப்பே ரறிவோர் தந்தசிறப் பன்ருே?நம் நாய்என்ருல் மட்டும் தகுதியிலாப் பெருமையெலாம் உரிமையென்றே ஆமோ? முந்துசிறப் பெனில்உலகம் ஒப்புதல்வேண் டாமோ? முத்தமிழின் முழுச்சிறப்பில் எத்தவற்றைச் சொல்வீர்? பலரறியும் வாய்ப்பொன்ருல் ஒருமொழியைப் பிறரும் படித்தறிய வேண்டுமெனில் அறிவுக்குயர் வெங்கே? பலரறியும் கீழ்மைக்கும் மேன்மேலும் மேலும் பல்வகையால் அதிகார வாய்ப்பளிப்பு தென்ருல் சிலரறியும் சிறப்புக்கும் கீழ்மைவா ராதோ? சிந்தனைக்கும் உயர்வுக்கும் மற்றென்தான் பெருமை? பலரறிவ தென்றில்லை; உங்கள்கர வெல்லாம் பைந்தமிழ்க்குச் சிறப்புவரக் கூடாதென் பதுவே: செந்தமிழ்க்கு வாய்ப்பளித்திங் குலகறியச் செய்தால், செத்தமொழி வடமொழிக்கும் இந்திக்கும் என்று. சொந்தநலம் ஒன்றிருக்கக் காணுர்கள் யாரும்! சோற்றுநலம் பெரிதென்பார் இங்கிருப்ப தாலே எந்தமிழைப் பிறரறிய வாய்ப்பின்றிச் செய்தார்! எதனிலுமே உயர்வுக்கே வாய்ப்பளிக்கும் ஆள்வோர் செந்தமிழ்க்கு வேண்டாதார்-ஆரியர்என் பதனல்- - சிறுமைக்கே வாய்ப்பளித்துப் பெருமைதனே யழிப்பார்!