பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 172 – எப்பெருமை சாற்றிடினும் ஆரியர்க்குச் சிறுமை இம்மிவரக் கூடாதென் பதுவடவர் கொள்கை: எப்பொழுதும் வடவோரே தலைமைதாங் குவதால் எப்பொழுதும் தமிழுக்கே வாய்ப்பளிப்ப தில்லை! இப்பொருளை-இவ்வுணர்வை-எந்தமிழர் எக்கால் ஏற்றறிந்து கொள்வாரோ அப்பொழுதே தமிழ்க்கும் முப்படியும் வாய்ப்புவரும்; இனமும்முன் னேறும்! முன்னிழந்த பெருமையெலாம் பின்னெழுந்து சேரும்: ஈங்கிதைத்தான் பாவேந்தன் எடுத்துரைக்கக் கேட்டோம்: ஏற்றமிகு பாக்களினல் மாற்றம்வரக் காணுேம்! ஆங்கதையே பெருமையெனக் கருதிவிட்ட ததனல் அவன்கருத்தை விட்டுவிட்டே அவன்பெருமை ஆர்ப்போம்! துங்குகின்ருேம்; துரங்குகின்ருேம்; தூங்குகின்ருேம் இன்னும்! தொடையினிலே கயிறுபிறர் திரிக்கத்துங் குகின்ருேம்! ஏங்கினவன் பாவேந்தன்! எடுத்தெடுத்துச் சொன்னன்! எந்தமிழர் கேளார்கள் எனவறிந்தும் சொன்னன்! 5.6 'ன்றிருந்த தமிழ்வாழ இனம்வாழ, இங்கே மலிந்திருத்த வளமெல்லாம் என்றென்றும் வாழ, அன்றிருந்த பெருமையெலாம் நினைவூட்டிச் சொன்னன்; அணுஅணுவாய் எந்தமிழர் சிதைந்தகதை சொன்னன்! வென்றிருந்த தமிழ் ஒருகால் வீரம்எனும் கொம்பில் வீறுபெறும் கொடியாகப் பறந்தகதை சொன்னன்! இன்றிருக்கும் தமிழனுக்கோ சோற்றுருண்டை மீதில் - இருந்துவரும் ஆசையிலே எதையெண்ணிப் பார்ப்பான்? செந்தமிழே உள்ளுயிரே நறுந்தேனே என்றன் செயலெல்லாம் மூச்செல்லாம் உனக்களித்தேன்.யானே தைந்தாய்,நீ எனில்தைந்து போகுமென்றன் வாழ்வே நன்னிலைஇங் குணக்கென்னில் என் ... ... ".... ." N.