உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாரதிதாசனும் புலால்சோறும்


ஒருகால் பாவேந்தர் மதுரையிலிருந்து திருச்சி வழியாகச் சென்னை செல்ல வேண்டிருந்தது. அவர்க்குத் துணையாகச் சென்னையைச் சேர்ந்த நண்பரொருவர் உடன் இருந்தார். வண்டி திருச்சியை அடைந்தது. இரவு 10, 11 மணியிருக்கும். பாவேந்தரின் அருகில் ஒரு பெரிய பெட்டி, படுக்கை, கைப் பைகள் இரண்டு, சில புத்தகங்கள், இன்னும் சில பொருள் - களும் இருந்தன. நிலைய மேடையில் ஒருவன் 'பிரியாணி', ‘பிரியாணி' என புலால் சோற்றுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு விரைவாகக் கத்திக்கொண்டே போனான். புலால் சோற்றுமேல் பாவலருக்குக் கொள்ளை வேட்கை!. உடனே • தம்பி, ஓடிப்போய் ஒரு பொட்டலம் வாங்கி வா. இந்தப் பொருள்களைப் பார்த்துக்கொண்டு - நான்: "இங்கேயே இருக்கிறேன் என்று உடனிருந்தவரை எவினார். அவர் இறங்கிப் போவதற்குள் புலால் சோறு வண்டியின் வேறு மூலைக்குப் போய்விட்டது. இவர் அங்கு ஓடினார். இதற்குள் இவர்கள் ஏறியிருந்த வண்டிக்கு ஊதல் கொடுக்கப்பட்டது. பாவேந்தர் தவியாய்த் தவித்தார். சோற்றுப் பொட்டலம் - வேறு! ஆள் வேறு!......... இவர்க்கு இருப்புக் கொள்ள லில்லை; கதவருகில் வந்து நின்று பார்த்தார். ஆளைக் காண : வில்லை; வண்டி. நகர்ந்தது. பாவலர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை; 'சடக்' கென்று. கீழே குதித்தார். அவரின் பெட்டி, படுக்கை, பைகள். முதலிய எல்லாப் பொருள்களும் - சென்னையை நோக்கிப் போயின! வண்டி மேடையைத் - : தாண்டிக் கொண்டிருந்த நேரத்தில் சோற்றுப் பொட்டலத் > துடன் ஆன் வெறிக்க வெறிக்க ஓடிவந்தார். "ஏன் ஐயா இறங்கி விட்டிங்க? நான் ஓடிவந்து ஏறியிருப்பேனே பெட்டி * படுக்கையெல்லாம் எங்கே?” : என்றார் வந்தவர். நல்ல ! 'ஆளப்பா நீ; நான் என்ன பண்ணுவது! உன்னை விட்டுவிட்டு எப்படிப் போவது .....? ஒண்ணும் தெரியலை இறங்கிட்டேன்' " ; என்றார்... 'நல்லவேளை பொருள்கள் ஒழுங்காகச் சென்னை - - , நிலையத்தில் எடுத்துவைக்கப்பெற்றுப் பிறகு இவர்களிடம் - தரப்பெற்றன . . . (சுவடி 2. ஓலை 4-பக் 265 சகள் - பின் சோறர்." பொல்