உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



2. படியளந்த பாவலர்!

புதுச்சேரிப் பகுதியில் பொதுவாக அரிசி முதலிய வற்றைப் படி நிறையக் கூம்பாக அளக்காமல் தலை தட்டியே அளந்து கொடுப்பது வழக்கம். புரட்சிப்பாவலர் பாரதி தாசன் ஒருநாள் மாலை, கடைத்தெருவில் உள்ள தம் பதிப் பகத்தின் முன்றிலில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். பக்கத்துக் கடை அரிசிக்கடை. அரிசிக் கடைக்காரர் பாவலரின் நண்பர். விற்பனை நேரத்தில் அரிசிக் கடைக்காரர் சிறிதுநேரம் வெளியே போய்வர வேண்டியிருந்தது. உடனே பாவலரிடம், "இந்தக் கடையைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா” என்று கூறிப் போளுர், பாவலர் கடையைக் கண்காணிக்கும் பொழுதில் ஒர் ஏழைப்பெண் கடைக்கு வந்து ஒரு படி அரிசி விலைக்குக் கேட்டாள். அரிசிக் கடைக்காரர். அதுவரை வராது போகவே, பாவலரே எழுந்து வந்து காசை வாங்கிக்கொண்டு அரிசியை அளந்தார். அவர் தலை தட்டாம்ல் அளந்து போடுவதை அப்பெண் குறிப்பிட்டு, தலைதட்டிப் போடுங்க ஐயா” என்ருள். உடனே அவர் இரக்கச் சிரிப்போடு, "சரிம்மா, இந்தக் கடைக்காரர் ஏமாற்றுக்கார ஆள். எத்தனையோ பெயரை ஏமாற்றி யிருப்பார். இதல்ை அவர்க்கொன்றும் குறைந்து போகாது. இந்தா, பிடி; விரைவாக வாங்கிக்கொண்டு போய் விடு: என்று கூறிக்கொண்டே கூம்புவைத்து அளந்து போட் டனுப்பினர். ஒர் ஆழாக்கு அரிசியை அதிகமாகப் பெற்றுக் கொண்ட அந்த ஏழைப்பெண், இவரை வாழ்த்திக்கொண்டே போளுள்! |சுவடி 1. ஒலை 1. பக். 56-57-நகைநலம் பகுதி)