பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பாவேந்தர் மனம் ...! பாவேந்தரை எவர் வந்து எவரிடம் பரிந்துரை (சிபார்க) செய்யக் கூ ப் பி ட் டா லு ம் உடனே வந்துவிடுவார். எத்தனையோ பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த வகையில் வீட்டாருக்கு பெரிய மனக்குறை. இப்படி ஒரு காசு கூட ஊதியமில்லாமல் காலத்தையும்,நேரத்தையும், மானத்தையும் பாராமல் சிறு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்குக் கூட ஒடுகிருரே! ஏழைகள்தாம் போகட்டும், பணம் படைத்தவர்களிடமாவது, தம் போக்கு வரத்துச் செலவுக்காகிலும் பணம் கேட்கக் கூடாதா?’ என்று அவர் வீட்டாரில் சிவர் வெளிப்படையாகவே பேசிக்கொண் டனர். இதுபற்றி ஒருநாள் அவரிடம் கேட்கப் பெற்றது. "நம்மிடம் பரிந்துரைக்கென்று வருபவர்கள் எல்லாரும் ஏழைப் பிள்ளைகளே! அவர்கள் காசுக்கு எங்கே போவார் கள்? ஒருவரிடமும் ஒரு காசும் வாங்கவே கூடாது........ நாம் என்ன செய்து விடுகின்ருேம்.......பாவம் நம்ம தமிழ்ப் பிள்ளைகள் நிறைய பணத்தைக் கொட்டிப் படிக்கிருர்கள். பிறகு வேலையில்லாமல் திண்டாடுகிருர்கள். இந்த உதவி கூட நாம் செய்யக்கூடாதா ?” என்று அதற்கு விடை கூறினர். ஆனால் அவர் பாடல்களைப் பாடப் புத்தகங்களில் சேர்த்துக்கொள்ள வெளியீட்டாளர்கள் இசைவு கேட்ட பொழுதெல்லாம் ஓர் அடிக்கு இரண்டு 2 ரூபா மேனி கணக் குப்போட்டு வாங்கிவிடும்படி அவர் வீட்டாருக்குக் கண்டிப் பான கட்டளை போட்டிருந்தார். - |சுவடி 2. ஒலே 4. பக் 34: