பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாவேந்தர் குறும்பு! பாரதிதாசன் சிறியவராக இருக்கையில் குயில், சிவா என்பவரும் இவரும் பல குறும்புத்தனங்களைச் செய்துள்ளனர். அவற்றில் ஒன்று இது. ஒருநாள் ஒரு வீட்டில் வ்ாழைமரம் கட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் மறுநாள் காலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறப் போவதாக இவர்கள் அறிந்துகொண்டனர். அன்றை இரவு இவர்கள் இருவரும் சேர்ந்து அவ்வீட்டில் கட்டியிருந்த வாழை மரங்களை வேருெரு வீட்டில் கொண்டுபோய்க் கட்டிவிட்டனர். அத்துடன் விட வில்லை. அந்த ஊர்ச் சாவடியில் தங்கியிருந்த ஏழை இரவலர் களிடத்தில் போய் அந்த வீட்டில் அதிகாலையில் சிறந்த விருந்து கிடைக்குமென்றும் கூறிவிட்டனர். அல்வளவுதான் ! விடியற்காலையிலேயே ஏராளமான இரவலர்களும் ஏழை களும், துறவிகளும் புதிதாக வாழைமரம் கட்டப்பட்டிருந்த வீட்டு வாயலில் நிரம்பிக் கிடந்தனர். பிறகு தெருவே பெரிய ஆரவாரப்பட்டுக் கிடந்தது. இறுதிவரை அந்த வேலையைச் செய்தவர்கள் இவர்கள் இருவரே என்று ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. - |சுவடி 2. ஒலை 4. பக். 36)