பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சாவிலும் தமிழ் வாழ்வு பாவேந்தர் பாரதிதாசன் சென்னை மருத்துவ மனையில் நினைவற்ற நிலையில் படுத்திருந்தார். இறப்பதற்கு இரு நாட்கள் முன்னே, புலவர். திரு.மு. வரதராசனர் பாவேந் தரைப் பார்க்க வந்திருந்தார். மு.வ. வின் வரவு பாவலருக்கு உணர்த்தப் பெற்றது. பாவலர் மு.வ. வைப் பார்த்துப் புன்னகை செய்தார். உடனே கையசைத்து அருகில் வரச் செய்து அடுத்து நடக்கும் புலவர் குழுவின் கூட்டம் பெங்களூரில் நடக்கப் போவதாக அறிந்தேன்; நம் தமிழ் நாட்டின் இசைப் பாடகியான திருவாட்டி. சுப்புலட்சுமியை அங்குள்ள தமிழ்ப்பகைவர்கள் பாடவிடாமல் தடுத்தனரே அச்செயலுக்கும் கூட நான் கண்டனக் கூட்டங்கள் போட்டேனே! அவ்வூரில் போய் ஏன் புலவர் குழுக் கூட்டத்தை நடத்தவேண்டும்? அங்கு தடத்த வேண்டா என்று போய்ச் சொல்லுங்கள்' என்று கண்களில் ஒளியேறு மாறு உரைத்தார். செத்துக் கொண்டிருக்கையிலும் சாகாத மான உணர்வு பாவேந்தரின் தனி உடைமை! . . |சுவடி 2. ஒலை 4. பக்.45)