பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பாவேந்தரின் நெஞ்சுரம்! புதுவையில், முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திருக் குறளுக்கு இசையமைத்து இசைப்பாடல்களாகவே பாடிக் கொண்டுவரும் புலவர் ஒருவர்க்குப் பாராட்டு நடை பெற்றது. அவ்விழாவிற்குப் பாவேந்தர் தலைமையேற்ருர், கூட்டத்தின் தொடக்கத்தில் தலைவர், திருக்குறள் இசை' புலவரை வரவேற்று அவர் தொண்டை மிகவும் புகழ்ந்தார். "திருக்குறளைப் படித்தறியாத மக்கட்கெல்லாம் பண்ணுேடு பாடப்பெறுகின்ற திருக்குறளடிகள் நல்ல பயனைத் தரும்'. என்றெல்லாம் பாராட்டினர். கூட்டம் தொடங்கிப் புலவர் ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு பண்ணில் பாடிக் கூட்டத் தாரை மகிழ்வித்தார். கூட்டம் இசையால் மெய்ம்மறந் திருந்தது. முதலதிகாரம் முடியும் தறுவாயில் பாவலர் திடுமென எழுந்து புலவரை நோக்கி நிறுத்து; நீ இனிமேல் பாட வேண்டா. குறளில் உள்ள சொற்களை இசைக்காகச் சிதைத்தும் பிரித்தும் திரித்தும் பாடுவாய் என்று எனக்கு முன்பே தெரியாமற் போய்விட்டது. இனி இந்த வேலையை விட்டு விடு". என்று கண்டனக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார். கூட்டம் திகைத்தது. இசைப் புலவர் மேடையை விட்டுக் கீழிறங்கினர் தம் இசைக் கருவிகளை எடுத்து அக்குளில் வைத்தார். விடுவிடென்று கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஓடினர். பாவேந்தர் ஒலிபெருக்கியில் 'போகட்டும்; போகட்டும்; தமிழைக் கெடுக்கும் இத் தகையார் முயற்சிக்குத் துணை நிற்கவே கூடாது'. என்று முழங்கினர். - (சுவடி 2. ஒலை 4, பக்.50)