பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. பாவேந்தரின் தமிழ்ப்பண்பு ஒரு முறை பாவேந்தர் ஒய்வுப் பணம் (பென்சன்) பெற்றுக்கொண்டு இழுவண்டியில் வந்துகொண்டிருந்தார். அப்பொழுது வண்டிக்காரர் அழுது கொண்டிருப்பதைக் கண்டு “ஏன் அழுகிருய்” என்று கேட்டார். அதற்கு வண்டிக் காரர், 'ஐயா என்மனைவி கருப்பமாக இருக்கிருள்; அவளுக்கு மருந்து வாங்கவும் ஊசி போடவும் பணமில்லை; பலரிடம் கேட்டுப் பார்த்தும் பயனில்லை; அவள் கை, கால்கள் வீக்கமும் தணிந்தபாடில்லை; அதற்கு என்ன் செய்வது என்று எண்ணி, எண்ணி நானே அழுது கொண்டிருந்தேன்' என்று புலம்பியவாறே கூறினர். இதைக் கேட்ட பாவேந்தர் “அதை ஏன் என்னிடம் சொல்லியிருக்கக் கூடாது? இந்தன்' என்று ஒய்வுப்பணம் உருபா ஐம்பதையும் எடுத்துக் கொடுத்தபடி 'போய் முதலில் உன் மனைவியைக் காப்பாற்று; ஆளுல் இதை என் வீட்டில் சொல்லிவிடாதே; நானே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்தாராம் என்னே தமிழ்ப் பண்பு?! (வெங்காலூர் தமிழ்மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 'பாரதிதாசன் நினைவு விழாவில் பாவலரேறு அவர்கள் நிகழ்த்திய உரையில் ஒரு பகுதி.) - - சுவடி. 6, ஒல், 3, பக். 16