பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரும் பருப்புத்துவையலும் பாவேந்தருக்குப் பாச்சுவை போலவே நாச்சுவையும் மிக்கிருந்தது. சிறிதளவே உண்டாலும் மிகவும் சுவையான பொருள்களையே உண்ணுவார். வீட்டாருக்கு இவர் உணவைப் பற்றி மிகுந்த அக்கறை இருக்க வேண்டும். இல்லையெனின் தொல்லைதான்; பாவலர் விரும்பிய தின் பண்டங்களையெல்லாம் உடனுக்குடன் செய்து கொடுத்து: அவரையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்வதில் அவர் துணைவி யார் தனி இன்பம் கண்டார். அவர் பாவுணர்வைப் போலவே நாவுணர்வையும் நேரம் காலமின்றி வெளியிடுவார். ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணி, பாவேந்தர் என்னவோ நினைத்துக் கொண்டார். உடனே பக்கத்தறை யில் படுத்திருந்த மனேவியைப் பழநியம்மா' என்று கூப்பிட்டார். அம்மையார் ஏதோ என்னமோ என்று நினைத்துக் கொண்டு விரைந்து வந்து, "என்னங்க என்ன வேண்டும்?' என்ருர் பரிவுடன். பாவேந்தர் சிரித்துக் கொண்டே, ஒன்றுமில்லை, நம்ம வீட்டில் கடலைமா இருக்குமா?’ என்ருர். அம்மையாருக்கு அவர் சருத்து புரிந்து விட்டது. இரவு இரண்டு மணி என்று அறிந்து, "இப்பொழு தில்லை! எல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம் படுங்கள்' என்ருர்: பாவேந்தர் நினைத்தது இல்லாமற் போகவே, "சரி, துவரம் பருப்பாவது இருக்குமா?’ என்று மறித்துக் கேட்டார். 'இல்லை” என்று வெடுக்கென்று விடை வந்தது."என்னடி, இவ்வளவு பெரிய வீட்டில் துவரம் பருப்பு ,இல்லையா?” என்ருர். அம்மையார் துரக்கக் கலக்கத்தில் مسبب وراثة "இருக்கிறது; உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்: “அதை நன்முக வறுத்துத் துவையல் அரைத்துக் கொண்டு வா. நன்ருக இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னர். அம்மையாருக்கு அவர் குழந்தை போல் கேட்பதைக் கண்டதும் இரக்கம் ஏற்பட்டு விட்டது. சிறிது தேரத்தில் நல்ல மணமுள்ள பருப்புத் துவையல் வந்தது. பாவேந்தர் தாக்குத் தினவு அடங்க அதைத் தின்று விட்டுத்தான் படுத்தார். (சுவடி 2. ஒலை 4. பக். 541