பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரும்விளக்கெண்ணெயும்! பாவேந்தருக்கு மாதம் ஒருமுறை வயிற்றுத் துப்புரவுக் குக் கழிச்சல் மருந்து தரப்பெறும். அவரின் துணைவியார் இவ்வகையில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். அடிம்பு (பேதி) கொடுக்கும் நாளைக்கு முன்னிரவே வாத நாராயண இலைகளைக் கொண்டுவந்து இரா அடுப்பில் காய்ச்சி, விளக் கெண்ணெயை நிறைய ஊற்றித் தாளித்துச் சாறு வைத்துக் கொடுப்பார். பாவலர்க்கு அந்த நாளைக்கு முன்பே பெரிய கவலை! - ஒருநாள் விடியற்காலையில் எல்லாம் முறைப்படி செய்து எடுக்துக்கொண்டு அவர் துணைவியார் பாவேந்தரின் அறைக்கு வந்தார். பாவேந்தர் வயிற்றைப் பிசைந்து கொண்டிருந்தார் . . . அம்மையார் அறையில் நுழைந்த வுடனேயே விளக்கெண்ணெய் நாற்றம் பாவலரின் மூக்கைத் தொளைத்தது எப்படியாவது தப்பித்துக்கொள்ள எண்ணி, 'பழநியம்மா, இன்றைக்கு வயிறு சரியில்லை . . . இன்றைக்கு மட்டும் வேண்டா . . . “ என்று அழாக்குறையாகக் கெஞ்சி ஞர். அம்மையார் இவற்றிலெல்லாம் மிகவும் கண்டிப்பு: கட்டாயப்படுத்தி விளக்கெண்ணெயைக் குடிக்க வேண்டினர். பாவலர் கெஞ்சிக் கூத்தாடினர். பின்னே, காய்ச்சிய சாற்றை என்ன செய்வது?" என்று அம்மையார் கேட்டார். அவ்வளவுதான்! பாவலர் உடனே, டேய்! பிள்ளைகளா! எல்லாரும் இ’ங்க வாங்க” என்று பிள்ளைகளைக் கூப்பிட்டார். அதன் பின் இவர் குடிக்க வேண்டிய விளக்கெண்ணெய் அன்று முழுவதும் பிள்ளைகள் வயிற்றைக் கலக்கியது. . . . ! (சுவடி 2. ஒலை 4. பக் 65)